பொதுத்தேர்தல்: 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்
பொதுத்தேர்தல்: 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுமார் 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு ஏற்கனவே வருகைத் தந்துள்ளதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
சுதந்திரமான தேர்தலுக்காக ஆசிய வலையமைப்பில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் நாட்களில் வருகைத்தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கமைய சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் உட்பட எட்டு நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவும் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளனர்.
இதேவேளை, தேர்தல் பிரசார காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது மிகக் குறைவாகவே காணப்படுவதாக தேர்தல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.