ட்ரம்பின் வெற்றி, வெற்றியா வெட்கக்கேடா?… ஏலையா க.முருகதாசன்
பெண் விடுதலைக்கெதிரானவர்கள்,பெண்களை முன்னணிக்கு வரவிடமாட்டார்கள் அவர்கள் சிந்தனையை அலோசனைகளை அறிவுரைகளை என்றும் கவனத்தில் எடுக்கமாட்டார்கள் என்ற ஆசிய ஆபிரிக்க நாடுகள் மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து வைப்பவர்கள் வல்லாதிக்கநாடுகளைச் சேர்நதவர்கள்.; அதிலும் அங்கே அநியாயம் நடக்கிறிது இங்கே அநியாயம் நடக்கிறது என்று மனித குலத்திற்காக சாரை சாரையாக கண்ணீர் வடிக்கும் நாடு அமெரிக்கா.
பெண்ணினத்துக்கு ஏதாவது சிறுகாயமோ மனவருத்தமோ ஏற்பட்டால் அதைச் செய்தவர்கள் மீது அணுகுண்டையே வீசுவோம் என முஸ்டி உயர்த்திச் சூளுரைப்பவர்கள் இந்த அமெரிக்கர்கள்தான்.
அதிலும் இந்தியா மீது அமெரிக்கர்கள் எப்பொழுதுமே கீழ்நோக்கிப் பார்ப்பவர்கள்.இந்தியா பெண்களை அடிமைப்படுத்தும் நாடு எனவும் பொதுவான கருத்து அவர்களுக்கு உண்டு.
ஆசிய நாடுகளைவிட பெண்களை மதிக்காத நாடுகளாகவும் ஒரே வேலை செய்த போதும் ஆண்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட பெண்களுக்கு சம்பளத்தை குறைவாகக் கொடுக்கும் நாடுகளாக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இருந்து வருவதை காணக்கூடியதாகவிருக்கின்றது.
அமெரிக்காவை ஆள்வதற்கு பெண்களுக்கு தகுதியில்லை என்பதை அமெரிக்க மக்கள் இரண்டாவது முறையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
அமெரிக்கா கனடா பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தவிர்த்து பல நாடுகளில் அந்நாட்டுத் தலைவர்களாக பெண்கள் இருந்திருக்கிறார்கள்,இருந்தும் வருகிறார்கள்.
உலக நாடுகளிலேயே முதல்முதலாக இலங்கையில் திருமதி.சிறீமாவோ பண்டாரநாயக்கா என்ற பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு நாட்டை வழிநடத்தியிருக்கிறார்.
இந்தியாவில் இந்திரா காந்தி,இஸ்ரேலில் கோல்டா மேயர்,பிரித்தானியாவில் மார்க்கிரட் தட்சர்,தெரேசா மே,லிஷ் றுஸ்,ஜேர்மனியில் இருமுறை கான்சலறினான ஏன்ஜலா மேர்க்கல்,நியு சீலண்ட் யசிண்டா ஆர்டன்,டென்மார்க் மெற்றா பிறடெரிக்சன்,நோர்வே எர்ணா சொல்பேர்க்,சுவீடன் மக்டெலேனா அண்டர்சன்,தன்வசானியாவில் சமலா சுகுகு கசான்,டோகோவில் டோகயோ ரொமகா (தேசசாதிபதி),முதன்முறையான அரபு நாடான டுனியாவில் நைலா பவுலன் ரொமடன்,துருக்கியில் ரன்சலர்,பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ,பங்களாதேஷ்சில் கலேடா சியாவும் கசினா,செனகலில் தேசாதிபதியாக மமே மடிமென்,இந்தோனேசியாவில் தேசாதிபதியாக மேகாவதி சுகர்னோபொதிவ்,கிர்கிஸ்தானில் றோசா ஒபன்பாய்யோ,கொசோவா தேசாதிபதியாக அற்றிப்போ யாலவா,மாலியில் சிசே மரியன் டைம்மா,வட சைப்பிரசில் சீபல் சீயர்,செனகலில் தேசாதிபதியாக அமினா றோசா,தேசாதிபதியாக அமீனா குறிப் பாக்கன் மொரிசியஸில்,சிங்கப்பூரில் தேசாதிபதியாக கலிமா யாக்கப்,கொசோவாவில் தேசாதிபதியாக வியசோ எனப் பல நாடுகளில் பெண்கள் பிரதம மந்திரிகளாகவும்,தேசாதிபதிகளாவும் இருந்திருக்கிறார்கள் இருந்தும் வருகிறார்கள்.
ஆனால் அமெரிக்காவில் பெண்கள் நாட்டை ஆளக்கூடாதென்ற ஆணாதிக்கம் இருந்து கொண்டேதான் வருகிறது.பெண்கள் அமெரிக்காவில் ஆளுநராக இருக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் அமெரிக்க மக்களின் பொதுச்சிந்தனை ஆணாதிக்கம ;கொண்டதாக இருப்பதை அவர்களின் போக்கிலிருந்து அறிய முடிகின்றது.
நாகரீகத்;தில், முப்படைப் பலத்தில், விஞ்ஞானத்தில் என எல்hவற்றிலம் முன்னேறிக் கொண்டிருக்கும் அமெரிக்கா பெண் விடுதலைக்கெதிரான நாடுதானோ எனச் சிந்திக்கு வேண்டியுள்ளது.
திரைப்படங்களில் வலுவுள்ள பெண்களாக காட்டப்படும் பெண்கள் அரசியலில் அவர்களால் தலையெடுக்க முடியவில்லை.
தேர்தலின் வெற்றிதான் அமெரிக்காவின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்றது என்று சாக்குப் போக்குச் சொல்லப்படுகின்றது.
கமலா கரீசின் தோல்விக்கு மூன்று காரணங்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு.ஒன்று அவர் ஒரு பெண்,இரண்மடாவது அவரின் நிறம்,மூன்றாவது அவரின் மூதாதையர்.
ஒபாமாவுடன் ஒப்பிட்டு நிறத்தை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தால் அவர் ஒரு பெண் என்பதும் அவரின் மூதாதையருமே காரணமோ என எண்ணத் தோன்றகின்றது.
கிலாரி கிளிண்டன் தேர்தலில் நின்ற போது அவர் வாழையடி வாழையாக அமெரிக்கக்: குடிமகள்,நிறத்தில் அவர் வெள்ளை என அவர் வெல்வதற்கான சாதக நிலை இருந்த போதும்,அமெரிக்கா என்ற வல்லரசை பெண்ணான கிலாரி கிளின்டனால் கட்டியாள முடியாது என்ற அபிப்பராயமே அவரைத் தோல்வியடையச் செய்தது.
தேர்தல் காலங்களில் கவனிக்கப்பட்ட அவதானிப்புகள் வாயிலாக கமலா கரீஸ் வெற்றியடைவார் என்ற கணிப்பீடு இருந்தது போலவே கிலாரி கிளின்டன் போட்டியிட்ட போதும் இருந்தது.
கமலா கரீசைத் தோற்கடித்தவர்களில் கணிசமான இந்தியர்களுக்கும் பங்குண்டு.இந்தியர்கள் என்ற பொதுநிலையில் இந்தியர்கள்,இந்திய மாநிலத்தவர்கள் என்ற வேறுபாட்டையோ,மொழிகளின் வேறுபாட்டையோ,மதவேறுபாட்டையோ,இன வேறுபாட்டையோ,நிறவேறுபாட்டையோ பெரிதாகக் கவனத்தில் எடுப்பது இல்லை ஆனால் வளர்ச்சிடைந்த நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களில் சில வேறுபாட்டினை வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும் உள்ளுக்குள்ளே அவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.
தமிழ்நாட்டினை,தமிழர்களை தமிழர்களல்லாதவர்கள் மதிப்பதில்லை பொருட்படுத்துவதில்லை.கமலா கரீஷின் வேர் தமிழராக இருப்பதும் அவர் வெற்றிபெற்றால் அவர் அமெரிக்கக் குடிமகளாக இருந்த போதும,ஒரு தமிழ்ப்; பெண் அமெரிக்காவை ஆள்வதா என யோசித்திருக்கலாம்.
ஓவ்வொரு வாக்காளனும் தான் சார்ந்துள்ள கட்சியின் கொள்கை மீது தனது கருத்திற்கமைய வாக்களிப்பதும் உண்டு.கட்சிகளில் அங்கம் வகிப்பவர் யார் என்று பார்த்தும் வாக்களிப்பதும் உண்டு.உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலஇ பல நாட்டவர்கள் வாழ்கிறார்கள்.அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அந்தந்த நாட்டு அரசியல்துறை தொட்டு அறிவியல் துறை போன்றவற்றில் முக்கிய பணிகளில் இருந்து வருகிறார்கள்.
துறைசார் அதிகாரிகளாகவும்,அரசியல் ஆளுமையாளர்களாகவும் இருந்து வருகிறார்கள்.எனினும் அரசியலில் நிறம்,மதம்,மொழி,இனம் என்பவற்றின் வேறுபாடுகளைக் கவனத்தில் எடுக்காமல் பொதுப்பண்பில் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள் என்றால் அதவும் இல்லை.
கிலாரி கிளிண்டனை தோற்கடிப்பதற்கு ஒரே ஒரு காரணமே இருந்தது.அது அவர் ஒரு பெண் என்பதே காரணம்.
ஆனால் கமலா கரீஷ தோல்வியடைந்ததற்குக் காரணம் அவர் ஒரு கலப்பினம்,அவரின் நிறம் என்பதுடன் இந்தியர்கள் அவர் தமிழ் மரபணு கொண்டவர் என்பதற்காகவுந்தான் அவர்களில் தமிழரல்லாதவர்கள் வாக்களிக்காமல் விட்டிருக்கலாம்.
பொதுவாகவே அமெரிக்க மக்களிடம் தாம் உலகை ஆளும் இனம் என்பதுடன் அவர்கள் ஆணாதிக்கம் மிக்கவர்கள் என்பதும் கண்கூடு.
அமெரிக்காவிலிருந்து வரும் திரைப்படங்களை நாம் ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கின்றோம்.ஆனால் அவையும் அமெரிக்காவின் முகந்தான்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆணாதிக்கமே வென்றிருக்கிறது.பெண்ணடிமைத்தனம் வேறு எந்த நாட்டிலும் இல்லாதளவிற்கு அமெரிக்காவில் உண்டு என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஒரு குறியீடாகும்.