தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 11 வேட்பாளர்களும் 353 பேரும் கைது
பாராளுமன்ற பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 11 வேட்பாளர்கள் உட்பட 364 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 313 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் 51 முறைப்பாடுகள் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி வரை 1938 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவற்றில் 1884 முறைப்பாடுகள் சட்டத்தை மீறியமை தொடர்பில் பதிவாகியுள்ளது. 1603 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் 335 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.