மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை கொள்கை மீறல்: காஸா உயிரிழப்பு – 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்
இஸ்ரேல் – ஹமாஸ் நாடுகளுக்கிடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் தற்போது வரையில் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் இரு நாடுகளிலும் சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இதுவரையில் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதனடிப்படையில் 0 முதல் 4 வயது குழந்தைகள், 5 முதல் 9 வயது குழந்தைகள், 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என மூன்று வகைகளாக குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை மீறியதற்கான அடையாளமாக இப் பலி எண்ணிக்கை காணப்படுகிறது.
இதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.