ஈழத் தமிழருக்கான விஜயின் ஆதரவுக்கு பெரும் வரவேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தீர்மானம் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வரவேற்றுள்ளார்.
இலங்கை தொடர்பான விடயங்களில், தமிழக அரசைக் கலந்தாலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்,இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும், ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது எனும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தீர்மானத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வழித் தடத்தில் தமிழ்நாட்டு உறவுகளின் பங்களிப்பு என்பது மிக முக்கிமானது. அந்தவகையில் தமிழீழ மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்ட களத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இக் கொள்கை நிலைப்பாடு அமைந்துள்ளது.
முன்னராக தமிழினப் படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், நிரந்தர அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முன்னராக அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தினையும் இவ்வேளையில் நினைவிற் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.