முச்சந்தி

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க தேர்தலில் வெளிநாட்டு சக்திகள்

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் திட்டத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் செயற்படும் வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசாரணை நடத்தி அவர்களிடம் பணம் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிவித்துறு ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கறுப்பு பண வியாபாரிகள், பிரிவினைவாத சக்திகள் மற்றும் அடிப்படைவாத சக்திகள் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை போன்று தமது பணத்தில் தமது பொம்மைகளை பாராளுமன்ற உறுப்பினர்களாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பணம் பெற்றுக்கொண்ட உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலில் எனது பெயர் கிடையாது. இவ்வாறானவர்களாக என்னை விலைக்கு வாங்க முடியவில்லை. எமக்கு எதிரான தரப்புகளே இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. எங்களை தெரிந்தவர்கள் வழங்கும் சிறிய தொகையாக இருந்தாலும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஆனால் எங்களுக்கு தெரியாத, கறுப்பு பணத்தை வெள்ளையாக்குபவர்கள் பணத்தில் ஒரு சதத்தையேனும் நாங்கள் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன். இதனால் அந்த சக்திகளால் எங்களின் பெயரை பணம் பெற்றவர்களின் பட்டியலில் இணைக்க முடியாது போயுள்ளது.

வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பணம் பெற்ற பலரின் பெயர்கள் கூறப்படுகின்றன. தேர்தல் சட்டத்தின்படி இவ்வாறாக பணம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவும் ம ற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். பணம் பெற்றவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.