உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்காத: முன்னாள் அமைச்சர்கள்!
முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னும் மீள ஒப்படைக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர்களான சனத் நிஷாந்த மற்றும் மொஹான் த சில்வா ஆகியவர்கள் உரிய முறையில் உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரையில் மீள ஒப்படைக்கவில்லை.
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்களான அமரர் ஆர். சம்பந்தன் மற்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச ஆகியவர்கள் இதுவரையில் சரியான முறையில் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மொஹான் த சில்வாவுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை நேற்று புதன்கிழமைக்கு முன்னர் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு கூறியுள்ளது.
சனத் நிஷாந்த தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை நேற்று புதன்கிழமைக்குள் மீள ஒப்படைக்குமாறு அவருடைய மனைவிக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமரர் ஆர். சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை விரைவில் ஒப்படைக்குமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பி்ட்டுள்ளது.