ட்ரம்ப் வெற்றி: உச்சம் தொட்ட பிட்கொயின்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன் டிஜிட்டல் நாணயமான (cryptocurrency) பிட்கொயின் (Bitcoin) ஆனாது சாதனை உச்சத்தை எட்டியது.
அதன்படி, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமானது 7 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, இதுவரை இல்லாத அளவுக்கு 75,389 அமெரிக்க டொலர்களாக உச்சத்தை எட்டியது.
இந்த மைல்கல் கடந்த மார்ச் மாதத்தில் பதிவான 73,803.25 அமெரிக்க டொலர்கள் என்ற உச்ச நிலையினை முறியடித்தது.
மிகவும் தேவையான டிஜிட்டல் நாணயத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதியைத் தொடர்ந்து, பிட்கொய்ன் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
அமெரிக்க தேர்தல் செய்திகளைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள சந்தைகள் மற்றும் நாணயங்கள் புதன்கிழமை (06) கடுமையாக மாற்றம் கண்டன.
குறிப்பாக ட்ரம்பின் ஒரு வரலாற்று வெற்றியுடன் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்புவதால் டொலரின் பெறுமதி கடந்த எட்டு ஆண்டுகளில் மிகப்பெரிய இலாபத்தை பதிவு செய்தது.
அதன்படி, பவுண்டு, யூரோ மற்றும் ஜப்பானிய யென் உள்ளிட்ட பல்வேறு நாணயங்களுக்கு எதிராக டொலர் பெறுமதி சுமார் 1.65% உயர்ந்தது.
இது தவிர, முக்கிய அமெரிக்க பங்கு குறியீடுகள் உயர்ந்தன, வங்கிகள் சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.