அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கமலா வாழ்த்து!
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியான தேர்தல் முடிவுகளின் படி 270-க்கும் கூடுதலான எலக்டோரல் வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர், முதன்முறையாக ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் முன் தோன்றி கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.
இதன்போது ” அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெற்ற தோல்வியை தான் ஏற்றுக் கொள்வதாகவும், குடியரசு கட்சியை சேர்ந்த, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பிற்கு தான் வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கைக்காக, தான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும், இனிவரும் காலங்களில் தான் பெண்களின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடவுள்ளதாகவும் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.