பலதும் பத்தும்
விமானப் பயணம் செய்த நண்டு
நண்டு ஒன்று விமானத்தில் கொஸ்ட்டா ரிகாவிலிருந்து டென்வர் சர்வதேச விமான நிலையத்துக்கு பயணம்செய்த நிகழ்வொன்று பதிவாகியுள்ளது. தற்பொழுது அந்த நண்டு டென்வர் மிருகக்காட்சிச் சாலைக்குக் குடியேறியுள்ளது.
இதுபற்றி டென்வர் மிருகக்காட்சிச் சாலையின் பாதுகாப்புக் கூட்டணியினர் தெரிவிக்கையில், விமானம் டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானக் குழுவினர் நிலநண்டு அல்லது கரும்புள்ளி நண்டு என்று அழைக்கப்படும் இந்த நண்டு விமானத்துக்குள் பதுங்கி இருந்ததைக் கண்டுள்ளனர்.
அதன்பின்னர் அதனைப் பாதுகாப்பாகப் பிடித்து மிருகக் காட்சிச்சாலையில் ஒப்படைத்தனர் என்று தெரிவித்தனர்.