இந்தியா

2026 ஆம் ஆண்டு தி.மு.க தான் ஆட்சி அமைக்கும்: – மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கோவை சென்றபோது அங்கே தி.மு.க கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

விளாங்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை திறந்து வைத்த பின்னர், போத்தனூரிலுள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

“மக்களால் வைக்கப்பட்டுள்ள பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க ஆட்சி தான்.

மக்கள் கொடுத்த வரவேற்பின் மூலம் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்பதை தெரிந்துகொண்டேன்.

ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *