கவிதைகள்
கந்தன் திருவடி என்றும் துணையே!… (6ம் நாள்)… கவிதை… ஜெயராமசர்மா
சந்ததும் கந்தன் புகழ் பாடு
சஞ்சலங்கள் போக்கிடுவான் கந்தன்
வந்த வினை ஓடிடுமே நாளும்
வாராது வினை எம்மை நாடி
சொந்தம் எனக் கந்தனை நீ நம்பு
சுகமுன்னை நாடி வரும் என்றும்
அந்தகனும் நமை நாடி வாரான்
கந்தனுமே கை கொடுப்பான் என்றும்
வேலை நினைத்தால் வெற்றி நிச்சயம்
வேலன் வருவான் காலைப் பிடிப்போம்
காலைப் பிடித்தால் கவலைகள் கலையும்
கந்தன் திருவடி என்றும் துணையே !
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா