கவிதைகள்

வேறென்றாலும் வெறுப்பில்லை!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

அகிலம் இயக்கும் பேராற்றல் பெரிதெனவே
என்றுணர்ந்து எவர் சொன்னாலும்

அதை ஆண் பெண்ணென்றே ஆக்கிவைத்து
பார்ப்பதின் மர்மம்தான் என்ன

அங்கெங்கினா பேரருள் என்பதையுமே
அறையில் அடைக்கவும் முடிந்திடுமா

பாமரன் அறிந்திடவே செய்ததென்றால்
படித்தவரும் ஏனதை ஏற்கின்றாரோ

நீராய் நெருப்பாய் இருப்பதையும் பாலாய்
தேனாய் இருப்பதையும்

காயாய் கனியாய் இருப்பதையும்
ஆறாய் கடலாய் இருப்பதையும்

ஊணாய் உயிராய் குருதியென உள்ளதை
ஒருபோதும் ஏற்றிடமாட்டாரோ

அம்புலி காட்டி அன்னையும் சோறூட்டுவது
அறியாக் குழந்தையது என்பதாலே

பேராற்றலின் பெருமையை அறிந்தவர்க்கு
பேதைமை வந்ததும் எதனாலே

சூரியன் வருவதும் யாராலே சந்திரன் திரிவதும் எவராலே

என்றே கவிஞர் சொன்னாலும் இறுதியில்
சொன்னதை அறியலையா

எல்லாம் இப்படி பலர் பேசும் ஏதோ
ஒருபொருள் இருக்கிறதே

அந்தப் பொருளை நாம் தினைத்தே அனைவரும் ஒன்றாய் குலவிடவே

நிந்தை யாரையும் செய்யாது நிகழ்வதை
சொல்வதும் தவறாமோ

நாமக்கல் கவிஞர் சொன்னதையும்
நாமின்று மறந்ததுதான் ஏனோ

அன்பே கடவுள் என்பதையும் வையமதில்
அறிவுடையோர் என்றும் மறக்கவில்லை

இருப்பதை இங்கே இல்லை என்பார்
இல்லாததையும் உண்டென்பார்

முயற்சி மெய்வருந்த கூலி தருமென மெய்ப்
பொருளை வள்ளுவரே சொன்னாலும்

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவதை
மாநிலத்தில் எவரும் காணலையோ

கல்வி சிறந்த தமிழ் நாடென்பார் உயர்
கருத்தை சொன்னால் ஏற்கமட்டார்

பேரற்றலைக் கடவுளாய் தொழுபவரை
வேறு பெயரில் அழைத்திடுவார்

பேராற்றலை எதிர்ப்போரை ஏற்கவில்லை
என்றே நயமோடு சொன்னாலும்

நட்டகல் பேசுமா நாதன் உள்ளிருக்கவென
திருமூலர் சொன்னதை நாம்கூற

அதுவேறு இதுவேறென முழங்குவோர் முன்
வேறொருவனாய் தெரிகின்றேன்!

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.