உலகம்
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; தொடர்ந்தும் ட்ரம்ப் ஆதிக்கம்!
செவ்வாய்க்கிழமை (05) நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வடக்கு கரோலினா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் தோற்கடித்தார் என்று எடிசன் ரிசர்ச் கணித்துள்ளது.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படும் ஏனைய ஐந்து மாநிலங்களில் முடிவு நிச்சயமற்றதாகவே உள்ளன.
ஆனால் ட்ரம்ப் நாட்டின் பரந்த பகுதிகளில் பலத்தை வெளிப்படுத்தினார். அவர் 247 தேர்வுக்குழு உறுப்பினர்களில் வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கமலா ஹாரிஸ் 213 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஒரு வேட்பாளருக்கு தேர்தலில் வெற்றிபெற 538 தேர்தல் வாக்குகளில் குறைந்தது 270 தேவை.