உலகம்

ஜனாதிபதி தேர்தல் – கடைசி நேரத்தில் கமலா சொன்ன வார்த்தைகள்!

உலகத்தின் பார்வை முழுக்க தற்போது அமெரிக்கா தேர்தல் மீதே உள்ளது. உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகாவும், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடாகவும் உள்ள அமெரிக்காவின் தலைவரான ஜனாதிபதி தேர்தல்  தொடங்கியது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார் என்பதைத் தெரிந்துகொள்ள உலகமே ஆவலுடன் உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக இருந்த குடியரசுக் கட்சியின் ட்ரம்பைத் தோற்கடித்து, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியானார்.

ஜோ பைடன் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக தேர்தல் களம் கடந்த சில மாதங்களாக சூடு பிடித்தது.

முதலில் தேர்தல் களத்தில் ஜோ பைடன் – டிரம்ப் ஆகியோரே இருந்தனர். ஆனால் உடல்நலன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஜோ பைடனுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழ, தற்போதைய உப ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரீஸ் ஜனாதிபதி வேட்பாளரானார்.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் டிரம்ப் – கமலா ஹாரீஸ் இடையே கடும் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் 18 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி இருப்பதால் 4.70 கோடி பேர் ஏற்கனவே வாக்குகளை செலுத்திவிட்டனர். அமெரிக்காவின் பல பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகிறார்கள். வடக்கு கரோலினா பகுதியில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். வாக்குப் பதிவு முடிந்தவுடன் உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரீஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அமெரிக்கா, இது உங்கள் குரல்களைக் கேட்கும் தருணம். இன்று நீங்கள் வாக்களிக்க வேண்டும். ஏனெனில் நாம் நம் நாட்டை நம்புகிறோம், அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்புகிறோம். உங்கள் வாக்கு உங்கள் குரல், உங்கள் குரல் உங்கள் சக்தி” என்றெல்லாம் கூறி வாக்களிக்க உதவி வேண்டுவோருக்கான இணையதளம் மற்றும் தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளார்.

மேலும், “வீட்டின் கதவுகளைத் தட்டுங்கள்… வாக்காளர்களை அழையுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அணுகவும்.. இதுவரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையின் அடுத்த அத்தியாயத்தை ஒன்றாக எழுதுவோம்” என்றும் கமலா ஹாரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.