பலதும் பத்தும்
406 மெட்ரிக் தொன் பட்டாசு கழிவுகள்; பாதுகாப்பாக அகற்றம்
தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 31 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
பண்டிகையின்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு கும்மிடிப்பூண்டியிலுள்ள தனியார் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டு அழிக்கும் செயன்முறை நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தீபாவளி தினத்தன்று 275 தொன் பட்டாசு கழிவுகளும் மறுநாள் 92,78 தொன் பட்டாசு கழிவுகளும் அதற்கு அடுத்த நாள் 167,55 தொன் பட்டாசு கழிவுகளும் அதற்கும் அடுத்த நாள் 146 தொன் பட்டாசு கழிவுகளுமாக கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக 406 மெட்ரிக் தொன் எடை கொண்ட பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக் கழிவுகளால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.