தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றையேனும் அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை!
நாட்டை தொடர்ந்தும் ஆட்சி செய்ய முடியாது என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்,
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுத்திருந்தோம். ஜனாதிபதி அநுரகுமார உடனடியாக அதனை வழங்க வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார தேர்தல்கால வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அவருக்கு மீண்டும் தேர்தல் கேட்கும் உரிமை இல்லை.
தற்போதைய அரசாங்கம் அரசாங்க ஊழியர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வாக்குறுதியளித்தது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அனுபவமிக்க குழுவொன்றை நாடாளுமன்றத்திற்கு மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
தம்மால் இந்த நாட்டை ஆட்சி செய்யமுடியாது என்பதை இந்த அரசாங்கம் நிரூபித்துள்ளது. தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றையேனும் அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை.எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. எரிவாயு விலைகுறைக்கப்படவில்லை. பொருட்களின் விலைகளும் குறைக்கப்படவில்லை. வரிகுறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவை அனைத்தும் இன்று காலாவதியாகியுள்ளன” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.