பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு mpox நோய்த் தொற்று
பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கம்மை (Mpox) நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் எற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆப்பிரிக்காவில் Mpox நோய்த் தொற்று பரவிய பகுதிகளுக்குப் பயணம் செய்திருந்ததாக அதிகாரிகள் சென்ற வாரம் தெரிவித்தனர். மீண்டும் லண்டனுக்குத் திரும்பிய அவருக்கு நோய் தொற்றியது கண்டறியப்பட்டது.
அவர் வீட்டில் உள்ள மேலும் இருவருக்கு நோய் பரவியுள்ளதாக மருத்துவப் பாதுகாப்பு அமைப்பு கூறியது. அதனால் mpox நோய்த் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றுக்கு உயர்ந்துள்ளது.
பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருந்தாலும் ஒரே வீட்டில் வசிப்போரிடையே நோய்த் தொற்று எளிதாகப் பரவக்கூடும் எனக் கூறப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் மாதம் உலகச் சுகாதார நிறுவனம் Mpox நோயை உலகப் பொதுச் சுதாதார நெருக்கடியாக அறிவித்தது.
இதுவரை ஜெர்மனி, ஸ்வீடன், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்ட நோய்த் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.