பலதும் பத்தும்

பாரிசில் ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பாரிய டைனோசர் எலும்புக்கூடு!

உலகின் மிகப் பாரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடு பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ளது.

நவம்பர் 16 அன்று பாரிசில் ஏலத்திற்கு வரவிருக்கும் “Vulcain” எனும் டைனோசர் எலும்புக்கூடு, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட மிகப்பாரிய டைனோசர்களில் ஒன்றாகும்.

இந்த அபூர்வமான எலும்புக்கூடு, அமெரிக்காவின் வைமிங் மாகாணத்தில் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இது 20.5 மீட்டர் நீளம் கொண்டதாகவும், சுமார் 80 சதவீத எலும்புகள் ஒரே டைனோசருக்கே சொந்தமானதாகவும் உள்ளது.

இதன் மூலம் இது ஒரு முழுமையான டைனோசர் எலும்புக்கூடாக கருதப்படுகிறது.

பிரான்சில் உள்ள Collin du Bocage மற்றும் Barbarossa என்ற ஏல நிறுவனங்கள் இந்த ஏலத்தை ஏற்பாடு செய்துள்ளன. ஏற்கெனவே பங்கு முன்பதிவில் 11 மில்லியன் முதல் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் தொடங்கியுள்ளது.

இந்த ஏலத்தில் வெற்றி பெறும் அந்த நபருக்கு GPS point, அகழாய்வு வரைபடம், osteological map ஆகியவை வழங்கப்படுவதுடன், அதற்கு புதிய பெயர் சூட்டுவதற்கும் உரிமை கிடைக்கும்.

Vulcain Late Jurassic Morrison Formation எனப்படும் பழமையான பூமிச் சட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சவுரோபோட் இன டைனோசர் ஆகும்.

இது Apatosaurus மற்றும் Brontosaurus இனங்களின் அம்சங்களைக் கொண்டிருப்பதோடு, Apatosaurus ajax மற்றும் Apatosaurus louisae இனங்களின் இடைநிலை இனமாகக் கருதப்படுகிறது.


Vulcain கடந்த ஜூலை மாதம் முதல் பாரிசின் வெளியே உள்ள Château de Dampierre-en-Yvelines மாளிகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட 40,000க்கு மேற்பட்ட மக்கள் வந்துள்ளனர்.

இந்த டைனோசர் எலும்புக்கூடானது கலை உலகிலும் ஏலத்தில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.