இஸ்ரேல் பற்றிய தகவல்களை கசிவு; பிரதமரின் நெருங்கிய ஒருவர் கைது
இஸ்ரேல் பற்றிய தகவல்களை கசியவிட்ட சம்பவத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய ஒருவருக்கு தொடர்பு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராகப் பணிபுரியும் ஒருவர், ஐரோப்பிய ஊடகங்களுக்கு தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவில் மேலும் மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வழக்கில் அவர்களின் பங்கு குறித்து உறுதி செய்யப்படவில்லை.
இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு சில சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விசாரணையில், இஸ்ரேலிய பாடுகாப்பு படையில் இருந்து சில ரகசிய தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி, இது தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் பணயக்கைதிகளை விடுவிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து நெதன்யாகு விலகி இருக்கிறார். தகவல் கசிவு வழக்கில் தனது அலுவலகத்தில் இருந்து யாரும் கைது செய்யப்படவில்லை என்று நெதன்யாகு கூறியுள்ளார். விசாரணை நடந்து வருவதாகவும் நெதன்யாகு கூறினார்.
கைது செய்யப்பட்டவர் பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்றும் பிரதமருக்கு நெருக்கமான உதவியாளர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நெதன்யாகுவுடன் இருக்கும் பல படங்களும் வெளியாகியுள்ளன.
இதேவேளை, காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பது பற்றிய செய்தி லண்டன் மற்றும் ஜேர்மன் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த விவகாரம் பொதுமக்களின் கவனத்துக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.