கஷ்டம் தீர சதுர்த்தி வழிபாடு!
விரதங்களில் முக்கியமான விரோதமாகவும் கடினமான விரதமாகவும் கருதக்கூடியது தான் இந்த கந்த சஷ்டி விரதம்.
கந்தனை நினைத்து மனதார அவனை வழிபட்டு இருக்கக்கூடிய இந்த விரதம் எத்தனை கடினமானதாக இருக்கிறதோ அத்தனை பலனை அளிப்பதாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.
ஆகையால் தான் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் இந்த கந்தசஷ்டி விரதத்தை முறையாக கடைபிடித்து முருகனின் அருளை பெறுகிறார்கள் இதில் எந்த ஐயமும் இல்லை.
அப்படியான இந்த காலத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதியும் விசேஷமானது தான்.
அப்படியாக இந்த சஷ்டி விரத காலத்தில் வரக்கூடிய சதுர்த்தி திதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த நேரத்தில் வரக்கூடிய இந்த சதுர்த்தி திதியில் நாம் விநாயகரை முறையாக வழிபட்டால் பலனை பல மடங்கு அதிகமாக பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த சதுர்த்தி ரீதியானது நாளை செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது.
இது மிக மிக விசேஷமானதாக கருதப்படுகிறது முதலாவதாக கந்த சஷ்டி விரதம் இருக்கக் கூடிய காலத்தில் வருகிறது.
அது மட்டும் இன்றி முருகருக்கு உகந்த செவ்வாய் கிழமையில் வருகிறது இதனை சிறப்பு வாய்ந்த இந்த சதுர்த்தி திதியில் நாம் விநாயகரை எப்படி வழிபட்டு முழு பலனை பெறலாம்.