இந்தியா
ஜம்மு-காஷ்மீரின் பரபரப்பான ஞாயிறு சந்தையில் கைக்குண்டு தாக்குதல்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா வரவேற்பு நிலையம் அருகே நெரிசலான ஞாயிறு சந்தையில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் இரண்டு பெண்கள், நான்கு இளைஞர்கள் உட்பட 12 பொதுமக்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பெரும்பாலும் கடைக்காரர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் நடத்தப்பட்ட என்கவுன்டருக்கு ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.