இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; 9 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தில் காணப்படும் பிளோர்ஸ் தீவில் உள்ள எரிமலை நேற்றைய தினம் வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை குறித்த எரிமலையில் வெளியேறிய தீக்குழம்பினால் சிலர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த எரிமலையானது சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *