உலகம்
சைக்கிளில் செல்பவர்களைக் குறிவைக்கும் ஜப்பான் அரசு!
ஜப்பானில் சைக்கிள் ஓடும் போது தொலைபேசியில் உரையாடினால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் யென் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய போக்குவரத்து சட்டத்தின் படி மது அருந்திவிட்டு சைக்கிள் ஓட்டினால் 3 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் யென் அபராதமும், சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு 3 லட்சம் யென் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.