நீடித்த நிலையான தீர்வு கிட்டும்வரை அரசில் ஒருபோதும் பங்கேற்க மாட்டோம்
நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை அடையும்வரை நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிகளாகவோ அமைச்சர்களாகவோ அரசாங்கத்தில் பதவியேற்பவர்களாக இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – கோணாவில் வட்டாரத்தின் தேர்தல் பரப்பரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையா ற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
நாங்கள் உரிமைக்காக போராடி வருகின்றோம் இந்த நிலையில் எங்களுக்கான மீளப் பெற முடியாத அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் அவ்வாறு நிலைத்து நிற்க்க கூடிய ஒரு அரசியல் தீர்வு எட்டும் வ ரை நாங்கள் எமது உரிமைக்காக போராட வேண்டிய நிலை நிர்ப்பந்தமே உள்ளது.
நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை அடையும்வரை நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிக ளாகவோ அல்லது அமைச்சர்களாகவோ அரசாங்கத்தின் பதவி ஏற்பவர்களாகவோ இருக்க முடியாது.
நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு அதிகாரத்தை சிங்கள தலைமைகள் எப்போது தருகின்றதோ நாங்கள் அப்போது அந்த அரசோடு பங்காளிகள் பற்றி பரிசீலிக்கலாம். நாங்கள் நாங்களாக இருப்பதற்கான அனுமதி இல்லாமல் பௌத்த விகாரங்களையும்,இராணுவ முகாம்களையும், இராணுவ திணிப்பையும் காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறகிறவர்கள் செய்து கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் மக்களை மறந்து அமைச்சு பதவி எடுப்பது எந்தவகை நியாயம்? ஆகவே தான் ஒரு நியாயமான உரிமையுடன் வாழ்வதற்கு விரும்புகின்றோம்.நாங்கள் நாங்களாக இருப்பதற்கு நாங்கள் பலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.