’புதுபுது சின்னங்களில் வருவோரை நிராகரிக்கவும்’
கிழக்கு மீட்புக்கென வந்தவர்கள், தமிழர்களின் சொத்துகள், வளங்கள் பறிபோகும் போது அதனை கைகட்டி, வாய்பொத்திய மௌனிகளாக பார்த்துக் கொண்டு நின்றவர்கள் ஆவர். இவ்வாறான நிலையில், புதுபுது சின்னங்களில் வருபவர்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேஜரும் வேட்பாளருமான தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.
கல்லடியிலுள்ள காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த முறை பொதுமக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அனைவரும் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக முன்வந்துள்ளமை மகிழ்சியான விடயமாகும்” என்றார்.
தேசிய கட்சிகள், தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளை குறைப்பதற்கான திட்டமே வடக்கு கிழக்கில் அதிகமாக களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே, இத்திட்டத்தை முறியடிக்க தமிழ் மக்கள் அனவரும் ஒன்று திரண்டு தேர்தலில் வாக்குகளை பிரிக்காமல் சிதறவிடாமல் தமிழரசு கட்சிக்கு பலமான ஆதரவளித்து வாக்களித்து அவர்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என்றார்.
அதேபோல தமிழ் தேசிய கட்சிகள் என தெரிவித்து காலத்துக்கு காலம் வெவ்வேறு சின்னங்களில் வருபவர்கள் மற்றும் கிழக்கை மீட்போம் என வந்து தமிழர்களின் சொத்துக்கள் வளங்களை சூறையாடியவர்களை, நீங்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
தமிழர்களின் விடுதலை நோக்கி பயனிக்கின்ற தலைமைக்கட்சியான தமிழரசு கட்சி அதிக பிரதிநிதித்துவத்தை பெற்று பாராளுமன்றத்தில் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் வரைபு நிலையிலுள்ள புதிய யாப்பை முன்னகர்த்தி எதிர்வரும் பாராளுமன்றத்தில் தமிழ் பிரச்சினைக்கான தீர்வை வழிவகைகளை கட்சி தலைமை செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.