முச்சந்தி
ஈரான் -சவுதி செங்கடலில் கூட்டு இராணுவ பயிற்சி: மத்திய கிழக்கில் கைகோர்த்த பரம எதிரிகள்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
(2023 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே சீனாவால் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது)
செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் சமரச வெற்றி:
2023 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே சீனாவால் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இஸ்ரேலை எதிர்த்து நிற்கும் ஈரானுக்கு ஆதரவாக பல அரபு நாடுகள் உள்ளன. இத்தகைய மத்திய கிழக்கில் திடீர் மாற்றத்தை இஸ்ரேல் அவதானமாக உற்று கவனித்து பார்க்கிறது.
குறிப்பாக லெபனான் மற்றும் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் இந்த மொத்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இது இஸ்ரேலுக்கு பெரிய அளவில் நெருக்கடியை கொடுக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் சீனா மேற்கொண்ட மாற்றத்தால் தற்போது இஸ்ரேல், அமெரிக்கா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன என்பதும் உண்மையே. முக்கியமாக ஈரான் – சவுதி ஒன்று சேர்ந்தது இஸ்ரேல், அமெரிக்காவை ஆச்சரியத்திக்கு உள்ளாகியுள்ளது.
நீண்ட கால பரம வைரிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளமையால், சீனா மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் தற்போது கைகோர்க்க முடிவு செய்துள்ளன.
அரபுலக உறவு மேம்பாடுமா ?
பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் பல நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சுனி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.
இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வந்தன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.
யேமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து திரை மறைவு போர் செய்து கொண்டு இருக்கின்றன.
அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை பெறுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.
இதேவேளை உளவு ஆவணங்கள் கசிந்து,ஈரானை மொத்தமாக அழித்திட் செய்ய இஸ்ரேல் போட்டுள்ள திட்டம் உலகிற்கு தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது. பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் – சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக தங்கள் உறவை முறித்துக்கொண்டன. சவுதி அரேபியா மூலம் ஷியா தலைவர் நிமிர் அல் நிமிர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஈரானில் இருந்த சவுதி அரேபியா ராஜாங்க ஊழியர்கள் தாக்கப்பட்டனர். இந்த மோதலால் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக உறவை முறித்துக்கொண்டன.
இந்த நிலையில் இவர்களுக்கு இடையிலான மோதல் என்பது சவுதி அரேபியாவில் ராஜாங்க ரீதியாக பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இரண்டு நாடுகளும் பல்வேறு திரை மறைவு போர்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. சீனா இவர்களுக்கு இடையில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. 2023 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே சீனாவால் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.