வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடக்கும் அதிசயம்!
கொரோனே நட்சத்திர அமைப்பு ஒவ்வொரு 80 வருடத்திற்கும் ஒருமுறை வெடிக்கும். இந்த நிகழ்வை காண விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அரிய பிரபஞ்ச நிகழ்வுகளில் ஒன்றான ஜாம்பி நட்சத்திரம் வானில் பிரகாசிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஜாம்பி நட்சத்திரம் என்றால் என்ன? எப்போது காணலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
நட்சத்திரங்கள் நிலையானவை மற்றும் மாறாதவை. எப்போதாவது, ஒரு நட்சத்திரம் முன்பு இல்லாத இடத்தில் பிரகாசமாக தோன்றும். பின்னர் அது சில நாட்கள் அல்லது வாரங்களில் மறைந்துவிடும். இந்த பளிச்சிடும் தோற்றத்திற்கான காரணம் கொரோனே பொரியாலிஸ் நட்சத்திர அமைப்பு.
பூமியிலிருந்து 3 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கொரோனே பொரியாலிஸ் அமைப்பானது, ஒரு இறந்த வெண் குறுமீன் மற்றும் செம்பெருமீன் என்ற நட்சத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த நட்சத்திர அமைப்பு ஒவ்வொரு 80 வருடங்களுக்கும் ஒரு முறை வெடித்து, ஒரு நட்சத்திரத்தை மீண்டும் கொண்டு வருகிறது. இதனால், இது ஜாம்பி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் வெடிப்பு நிகழ்வை, நோவா என்று நாசா கூறுகிறது. அப்படி கடைசியாக 1946-இல் இதுபோன்ற வெடிப்பு நிகழ்ந்தது.
அதைத்தொடர்ந்து இந்த அரிய நிகழ்வு 2026 ஆம் ஆண்டில் நிகழும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதேநேரம், வானில் தென்படும் சில நிகழ்வுகளின் அடிப்படையில் நோவா வெடிப்பு முன் கூட்டியே நிகழ வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
நோவாவாக மாறுவதற்கு முன்பு குறிப்பிட்ட நட்சத்திரம் சுமார் ஓராண்டுக்கு மங்கிவிடும் நிலையில், கொரோனே பொரியாலிஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் மங்கத் தொடங்கியது. இதனால், நோவா வெடிப்பு விரைவில் நிகழும் என்பதற்கான அறிகுறிகளை இவை அளித்திருக்கிறது.