பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் பிரபல நிறுவனம்
ஐந்து மில்லியன் பயணிகளை பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை குறைக்க Ryanair திட்டமிட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் விமானப் பயணத்திற்கான வரியை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையிலேயே Ryanair தலைமை நிர்வாக அதிகாரியான Michael O’Leary பிரித்தானியாவில் தங்கள் சேவையை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஸர் ஸ்டார்மர் அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையானது நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளை சேதப்படுத்துவதுடன் விமானப் பயணத்தை மிகவும் விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது என்றார்.
APD எனப்படும் விமான பயணிகள் வரியானது சர்வதேச விமானங்களுக்கு 2026 ஏப்ரல் 1ம் திகதி முதல் 2 பவுண்டுகள் அதிகரிக்கின்றன. இந்த நிலையில் பிரித்தானியாவில் Ryanair விமான சேவைகளை குறைக்கும் முடிவை அதன் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
இதனால் 5 மில்லியன் பிரித்தானிய பயணிகள் பாதிக்கப்படும் நெருக்கடி உருவாகியுள்ளது. ஸர் கெய்ர் ஸ்டார்மர் நிர்வாகம் சுற்றுலாத்துறை சேதப்படுத்தியுள்ளதுடன், பிரித்தானியாவுக்கான விமான பயணங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக Michael O’Leary குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் விமானப் பயண வரிகளை மேலும் உயர்த்துவதற்கான நிதியமைச்சரின் முட்டாள்தனமான முடிவு வளர்ச்சியை அல்ல பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
அயர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி மற்றும் இத்தாலி அரசாங்கங்கள் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சியைத் தூண்டுவதற்காக பயண வரிகளை ரத்து செய்துவரும் நிலையில்,
பிரித்தானியா வரிகளை உயர்த்தி இருப்பது வெளிநாடுகளில் விடுமுறைக்கு செல்லும் சாதாரண பிரித்தானிய குடும்பங்களுக்கு விமான பயணத்தை மிகவும் விலை உயர்ந்ததாக மாற்றும் என்றார்.