சிறையில் இருந்து விடுவிக்கக் கோரும் மிக ஆபத்தான திருநங்கை
கனடாவில் மூன்று மாத குழந்தையை கொடூரமாக சீரழித்த மிக ஆபத்தான திருநங்கை ஒருவர் குறிப்பிட்ட காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குழந்தை
தாரா டிசோசா என்ற 43 வயது திருநங்கை தற்போது தமது விடுதலை தொடர்பில் பெடரல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த 1997ல் 15 வயதேயான டிசோசா பச்சிளம் குழந்தை ஒன்றை மிகக் கொடூரமாக சீரழித்துள்ளார்.
அப்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Quesnel பகுதியில் இவர் தொடர்புடையை குழந்தையை கவனித்து வந்துள்ளார். மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த குழந்தை பல்வேறு அறுவைசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, தமது 11ம் வயதில் 3 வயது சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்ததாக ஒப்புக்கொண்டார். இவரது குற்றச்செயல்களால், கனடாவின் மிக ஆபத்தான குற்றவாளி என நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது பூர்வகுடி சடங்கு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு, தம்மை விடுவிக்க வேண்டும் என டிசோசா நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் டிசோசா தற்போது காலவரையற்ற தண்டனையை அனுபவித்து வருகிறார்.
காலவரையற்ற தண்டனை
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதாலையே டிசோசாவுக்கு காலவரையற்ற தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 2018ல் அவர் அறுவைசிகிச்சை முன்னெடுத்ததன் பின்னரே, பெண்களுக்கான சிறையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், தாம் ஒரு திருநங்கை என்றும், ஆணாக பிறந்து தற்போது அறுவைசிகிச்சைக்குப் பிறகு முழு பெண்ணாக மாறினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பரோலுக்கு பலமுறை முயன்றும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஜூன் மாதம் முயற்சி மேற்கொண்டிருந்தார். தற்போது அக்டோபர் மாதம் பெடரல் நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.