கவிதைகள்
“மாசக்தி கந்தனே” கந்தசஷ்டி … ( 2 ம் நாள் ) …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
சூரரை வதைக்க வந்தவன் கந்தன்
சூரரை வதைக்கா துடைத்தனன் அகந்தையை
அகந்தையை அழித்து அன்பைக் காட்டியே
அடைக்கலமாக அவன் கழல் அமர்த்தினான்
மாறுபடா சூரர்தமை மனந்திருந்தச் செய்தான்
வரமிழந்து சூரர்க்கு வரமாக அமைந்தான்
கூறுடைய குணமதனை குமரவேள் களைந்தான்
குன்றிருக்கும் இடமெல்லாம் சென்றுமே அமர்ந்தான்
ஏறுமயிலேறி விளை யாடியே நின்றான்
ஈசனுக்கே ஆசானாய் உபதேசம் செய்தான்
மாறுடைய மனத்தாரை மனமாற வைத்தான்
மாசக்தி மிக்க கந்தனே ஆவான்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா