இந்தியா

வயநாட்டில் நிலத்தடியில் கேட்கும் சத்தம்; அச்சத்தில் மக்கள்

கேரளாவின் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மண்சரிவில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பலர் உடைமைகளை இழந்து தவித்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் – கேரள எல்லையிலுள்ள மலப்புரம் மாவட்டம் போரத்துக்கல், ஆனக்கல் ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து நிலத்தினடியில் பலமுறை சத்தம் கேட்டதாக அப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் அப் பகுதியிலுள்ள 80 இற்கும் அதிகமான குடும்பங்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

பொதுமக்கள் பயப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.