பிரச்சினைகளை தீர்க்கும் நந்தீஸ்வரர் வழிபாடு!
சிவபெருமானின் கனபூதங்களில் ஒருவராக திகழக்கூடியவர் தான் நந்தீஸ்வரர்.
நந்தீஸ்வரரின் அனுமதி இல்லாமல் சிவபெருமானை நம்மால் வழிபாடு செய்ய முடியாது என்றும் அதையும் மீறி வழிபாடு செய்தாலும் அந்த வழிபாட்டிற்குரிய பலன் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
அனைத்து விதமான சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு முன்பாக நந்தீஸ்வரர் கண்டிப்பாக முறையில் இருப்பார்.
அப்படிப்பட்ட நந்தீஸ்வரரை நாம் வழிபாடு செய்துவிட்டு தான் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றளவும் பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை அப்படியே நந்தீஸ்வரருக்கும் தருவார்கள்.
அதேபோல் அபிஷேகங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு நந்தீஸ்வரரின் மேல் சிவபெருமானும் பார்வதி தேவியும் அமர்ந்து அந்த கோவிலை சுற்றி வருவார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நந்திஸ்வரரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும் பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும்.
அதிலும் குறிப்பாக நாம் மேற் சொன்ன வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, நோய் போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.