டிஜிட்டல் காண்டம் { CONDOM} அறிமுகம்
கரு உருவாகாமல் இருக்க உடலுறவின் போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் காண்டம் என்ற புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு பிரச்சனை மனிதர்களுக்குக் கொண்டு வந்தாலும் அதற்கான தீர்வும் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. கேமராவில் ரகசியமாகப் படம் பிடித்து மிரட்டுவது உள்ளிட்ட அபாயங்கள் பெருகி வருவதால் அதை தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருளே இந்த டிஜிட்டல் காண்டம்.
ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் என்ற நிறுவனம் உருக்காக்கியுள்ள கேம்டம் [Camdom] என்ற செயலி டிஜிட்டல் காண்டம் என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் அத்துமீறி வீடியோ பதிவு செய்தால் இந்த செயலியிலிருந்து அபாய Alarm அடிக்கும்.
அந்த வகையில் தம்பதிகள் பாதுகாக்கப்படுவதால் இது டிஜிட்டல் காண்டம் என்று அறியப்படுகிறது. இந்த செயலி தற்போதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில்பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.