குறைவான ஆசனங்களை பெறும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது!
தேசிய மக்கள் சக்தி இலங்கை பூராகவும் தம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நிலவரத்தின் படி 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்கள்.
ஜனாதிபதி தேர்தலிலும் இவ்வாறான ஒரு நிலைமை அவர்களுக்கு காணப்பட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
தற்பொழுது மக்கள் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டு வரும் ஒரு சூழ்நிலையே காணப்படுவது எங்களுக்கு அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
ஆகவே எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் இது பிரதிபலிக்கும். அத்தோடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் வாக்கு வங்கிகள் குறைவடைந்து செல்வதை எங்களுக்கு கண்கூடாக பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
இம்முறை நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் குறைவான பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என தெரிவித்தார்.