கட்டுரைகள்
ஈரானுக்கு ஆதரவாக திரளும் அரபு நாடுகள்: போர் சூழும் மத்திய கிழக்கில் திடீர் மாற்றம் ! ; ஐங்கரன் விக்கினேஸ்வரா
(நீண்ட கால பரம எதிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் தற்போது கைகோர்க்க நட்புறவாக முடிவு செய்துள்ளன. ஈரான் – சவுதி ஒன்று சேர்ந்தது இஸ்ரேல், அமெரிக்காவை ஆச்சரியத்திக்கு உள்ளாகியுள்ளது)
ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக இப்போது அரபு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மாட்டோம் என இந்த நாடுகள் ஒரே குரலில் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதைக் கண்டித்துக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு மிகப் பெரியளவில் பதிலடி தர இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ஈரானை சுற்றியுள்ள எல்லா அரபு நாடுகளும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளதாம்.
ஈரானின் அண்டை நாடுகள் தங்கள் மண்ணையோ அல்லது வான்வெளியையோ எந்த தாக்குதலுக்கும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளதாக ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பாக குவைத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி, எங்கள் அண்டை நாடுகள் எல்லாம் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளன. அதாவது ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தங்கள் மண்ணையோ அல்லது வான்வெளியையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
ஈரான் நாட்டை சுற்றி இப்போது பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி இப்போது அண்டை நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அவர் பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஈராக், எகிப்து மற்றும் துருக்கி நாடுகளுக்குச் சென்ற நிலையில், இப்போது குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளார். அவர் சொல்வதை வைத்து பார்த்தால் இந்த அரபு நாடுகள் எல்லாம் ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் பல பகுதிகளில் ராணுவ தளங்கள் உள்ளன. குறிப்பாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய பகுதிகளில் ராணுவ தளங்கள் உள்ளன. அந்த ராணுவ தளங்களைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம்.
ஈரான் அணுசக்தி நிலையங்கள்:
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனாலும், அதைச் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அணுசக்தி தளங்களைத் தாக்குவது என்பது பெரிய சர்வதேச போர் குற்றம்.
அதேநேரம் அணுசக்தி தளங்களைத் தாக்கப் போவதாக அச்சுறுத்துவது கூட குற்றம் தான். அது சர்வதேச உரிமைகளுக்கு எதிரானது. இதற்காகவே இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் ஈரான் மக்களையும் எங்கள் அணுசக்தி தளங்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்களுக்கென சொந்த கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அவற்றை நாங்கள் நம்புகிறோம் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி கூறியுள்ளார்.
அரபுரக உறவு மேம்பாடுமா ?
பல்வேறு விஷயங்களில் ஈரான் -சவூதி இரண்டு நாடுகளும் தீவிரமாக பல காலமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் பல நிலவி வருகின்றது. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சஉனி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.
இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.
யேமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து திரை மறைவு போர் செய்து கொண்டு இருக்கின்றன.
நீண்ட கால பரம எதிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் தற்போது கைகோர்க்க நட்புறவாக முடிவு செய்துள்ளன.
முக்கியமாக ஈரான் – சவுதி ஒன்று சேர்ந்தது இஸ்ரேல், அமெரிக்காவை ஆச்சரியத்திக்கு உள்ளாகியுள்ளது.