முச்சந்தி

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க கோரிக்கை

பி.எம்.டபள்யூ வாகனம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கட்சித் தலைமைகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருவதாக சிறைச்சாலை தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மருத்துவ அறிக்கைகளை முன்வைத்து இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவின்றி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாது.

இதேவேளை, தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் 180 படுக்கைகள் மாத்திரமே காணப்படுவதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், சிறைச்சாலை வைத்தியசாலையில் 350 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button