முச்சந்தி
முதன் முறையாக மன்னர் சார்லஸ் சமோவாவுக்கு விஜயம்!
பிரித்தானியாவின் மன்னராக முடிசூடிய பின்னர் முதன் முறையாக மன்னர் சார்லஸ் அவரது மனைவி கமிலாவுடன் பசுபிக் தீவு நாடான சமோவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மன்னருக்கும், ராணிக்கும் சமோவாவின் தலைநகரான அபியாவிy் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பழங்குடியின மக்களுடன் அமர்ந்து அவர்களது கலாச்சார நடனத்தையும் சார்லஸ் மற்றும் காமிலா ஆகியோர் கண்டு களித்தனர்.
தொடர்ந்து அவர்களின் பச்சை குத்தும் முறை, கைவினை தொழில், ஆடை தயாரிப்பு முறையையும் அரசு தம்பதி கேட்டறிந்தனர்.
முன்னதாக சமோவாவில் மாவோட பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளை அம்மக்களுடன் நடந்தே சென்று மன்னர் சார்லஸ் பார்வையிட்டார்.
மூன்று நாள் பயணமாக நேற்று மனைவியுடன் அங்கு சென்றடைந்த மன்னர் சார்லஸ் பசுபிக் தீவுகளின் மேலும் பல பகுதிகளை பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.