கரை ஒதுங்கிய 2,000 கிலோ புள்ளி சுறா!

சுமார் 2,000 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட இராட்சத புள்ளி சுறா கரை ஒதுங்கிய நிலையில் அச்சுறாவினை ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லும் முயற்சியில் கடற்படையினருடன் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். அம்பாரை, நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா ஒன்று 22 ஆம் திகதி கரையொதுங்கி இருந்தது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து கடற்கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறாவை கடற்படையினருடன் இணைந்து மக்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஆழ்கடலுக்கு இழுத்துச் சென்று பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button