இஸ்ரேலியர்கள் சில பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்: தேசிய பாதுகாப்புச் சபை அறிவிப்பு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் சில சுற்றுலாப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதில், பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், சில சுற்றுலாப் பகுதிகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இலங்கைக்கு அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என அந்த நிறுவனம் கூறுகிறது.

அதில், சமீபத்திய தகவல்களின்படி, பயங்கரவாத அச்சுறுத்தல் சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கசபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை குறிப்பிடவில்லை.

ஆனால், இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர்கள் வலியுறுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button