பலதும் பத்தும்

இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பாம்பு இனத்துக்கு பிரபல நடிகர் பெயர்!

இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்துக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டி காப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அரிய பம்பை இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பாம்பு இனத்துக்கு பிரபல நடிகர் பெயர்! | Species Of Snake Found In The Himalayas Dicaprioi

இதைத்தொடர்ந்து இது பேசுபொருளாக நிலையில் இதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டது.

இதன்படி இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர்.

நேபாள் நாட்டின் மத்திய பகுதி முதல் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவி உள்ளதாக கண்டறியப்பட்ட பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் டிகாப்ரியோய் [Anguiculus என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

டைட்டானிக் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற லியார்னர்டோ டி காப்ரியோ காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கவுரவிக்கும் விதமாக அவரது பெயரை இந்த பாம்பு இனத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர்.  இதேவேளை, சிக்கிம் பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள இமயமலை பகுதிகளில் கண்டறியப்பட்ட மற்றொரு பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் ராப்பி [Anguiculus என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 2 வகை பாம்புகள் ஆண்டின் மே மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது. அதிலும் ஆங்குய்குலஸ் ராப்பி அரிதினும் அரிதாகவே தென்படக்கூடியதாக உள்ளது. 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.