அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கை: கத்தோலிக்க திருச்சபையும் நிராகரித்தது

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

கொழும்பு பொரளையில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில்  நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, மேலும் கூறியதாவது,

”ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி.அல்விஸ் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை நாம் நிராகரிக்கிறோம.

கொலை விசாரணையில் சாட்சியங்களை மறைத்தமை மற்றும் அழித்தமை தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டைப் பெற்றுள்ள பிரசன்ன அல்விஸின் சகோதரியான ஏ.எம்.ஜே. டி அல்விஸை இந்தக் குழுவின் தலைவராக நியமித்தன் மூலம் உறவினர்களுக்கிடையே மோதல் உடனடியாக உருவாகும் என்பது தெளிவான உண்மை.

அவ்வாறானவர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை பக்கச்சார்பற்ற சுதந்திரமான அறிக்கையாக எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button