மகிந்த பயன்படுத்திய மூன்று வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அரசுக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் நேற்று (21) மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியவர்கள் பயன்படுத்திய மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு அரசாங்கம் விடுத்த அறிவிப்பிற்கேற்ப இந்த வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கெப் வண்டி ஒன்று, வேன் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் குறித்த மூன்று வாகனங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button