உலகம்

டென்மார்க்கில் இறைச்சிக் கூடத்தில் பயங்கர விபத்து; 54 வயது தமிழர் உயிரிழப்பு

டென்மார்க்கின் ஹோல்டட் நகரில் அமைந்துள்ள Danish Crown இறைச்சிக் கூடத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை எனவும், அதிகாரிகளின் விசாரணைகளுக்காக காத்திருப்பதாகவும் Danish Crownஇன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மின்தூக்கிகளுக்கு இடையில் நசுக்கப்பட்டதால் அந்த நபர் இறந்தார் என்ற கோட்பாட்டில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எந்த கிரிமினல் குற்றமும் நடக்கவில்லை!

விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணியளவில் 112 என்ற எண்ணின் மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவர் சிக்கியிருப்பதைக் கண்டோம் . சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த நபர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியர் ஒருவர் உறுதி செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து எப்படி நடந்தது என்று யாரும் பார்க்கவில்லை. எனினும், ஒரு குற்றம் நடந்ததாக நம்புவதற்கு தங்களுக்கு எந்த காரணமும் இல்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.