பலதும் பத்தும்
மனித வாடையே வீசாத தீவில் தனிமையாக வாழும் உயிரினம்!
உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழும் உயிரினத்தை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியலாளரும் புகைப்படக் கலைஞருமான ஜெஃப் கெர்பி, வட துருவத்தைச் சுற்றியுள்ள ஆர்க்டிக் பனியின் பரந்த நிலப்பரப்புக்கு முன், மிக உயரமான நிலப்பரப்பான காஃபெக்லுபென் தீவை சென்றடைந்துள்ளார்.
அணில்போன்ற வடிவத்தை ஒத்த உயிரினம் ஒன்று மாத்திரம் கற்குவியல்களுக்குள் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்வதை அவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
குறித்த உயிரினத்திற்கு ராண்டால் என பெயரிட்ட ஆய்வாளர்கள் டெர்ரா ஃபிர்மாவில் வாழும் பாலூட்டிகளைப் பொறுத்தவரை, ராண்டல் நிச்சயமாக வடக்கே ‘குடியேறிய’ நிலப் பாலூட்டியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.