மகாராணியிடம் 18 ஆண்டுகளாக உதவியாளர்..எதிர்பாராத விவரங்களை வெளிப்படுத்திய பெண்
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளராக பணிபுரிந்த பெண், சில எதிர்பாராத விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மகாராணியின் உதவியாளர்
சமந்தா கோஹென் (Samantha Cohen) எனும் 56 வயதான பெண், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் 18 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிவர் ஆவார். இவர் தற்போது மகாராணி குறித்து பல விடயங்களை கூறியுள்ளார்.
கோஹென் 1977ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் மகாராணியை முதலில் பார்த்துள்ளார். அரச தகவல் தொடர்பு செயலாளராக இருந்த கோஹென், பின்னர் தனிப்பட்ட உதவியாளராக பதவி உயர்வு பெற்றார்.
பின்னாளில் ராணியின் உதவியாளராக மாறிய பின் கோஹென் 2002, 2006, 2011ஆம் ஆண்டுகளில் என மூன்று முறை அவுஸ்திரேலிய சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டார்.
ராணி குறித்து கூறிய விடயம்
ராணியுடனான தமது உறவை மிகவும் மரியாதைக்குரியது என்று விவரிக்கும் கோஹென், அவர் நம்பமுடியாத எளிமையான நபராக இருந்தாராம்.
மேலும், குடும்ப பெண்ணாக இருக்க விரும்பிய ஒரு கூச்ச சுபாவமுள்ள நபர் என ராணியை வர்ணித்துள்ளார்.
அதேபோல் ஸ்கொட்லாந்தில் தனது விரைவான அன்பை ராணி எலிசபெத் காட்டினாராம். கோஹெனின் கூற்றுப்படி, ராணி எலிசபெத் Ego இல்லாத நபர் மற்றும் உலகின் பிரபலமான நபராக இருந்தாலும் அவர் பிரபலம் என்பதற்கு எதிரானவராம்.
சமந்தா கோஹென் கடந்த மாதம் (செப்டம்பர்) தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட அனுமதிக்கும் வகையில் அந்த பொறுப்பை விட்டு விலகினார்.