ஈரானைத் தாக்க நினைக்கக்கூட வேண்டாம்… புடின் கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் ஈரான் மோதல் வலுத்துவரும் நிலையில், ஈரானிலுள்ள அணு மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்னும் அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில், ஈரானைத் தாக்க நினைக்கக்கூட வேண்டாம் என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா கடும் எச்சரிக்கை
ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சரான Sergei Ryabkov, ஈரானிலுள்ள அணு மையங்களைத் தாக்க நினைக்கக்கூட வேண்டாம் என்று இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்துவது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
அக்டோபர் 1ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈரானிலுள்ள அணு மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்னும் அச்சம் நிலவுகிறது.
அதாவது, இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் மும்முரம் அடைந்துவரும் நிலையில், ஈரான் அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கக்கூடும் என்ற கருத்து உருவாகியுள்ளதால், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முன் அதன் அணு மையங்களைத் தாக்கி அழித்துவிடவேண்டும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூட தெரிவித்திருந்தார்.
ஆனால், இஸ்ரேல் ஈரானிலுள்ள அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்துமானால், அதனால் ஏற்படும் தொடர் விளைவுகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவேதான், ஈரானிலுள்ள அணு மையங்களைத் தாக்கும் எண்ணம் வேண்டாம் என்று இஸ்ரேலை ரஷ்யா எச்சரித்துள்ளது.