தமிழகத்தில் இமயமலையை விட மிகவும் பழமையான மலை…
திருச்சியின் புகழ்மிக்க அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
275 அடி உயரமான இந்த மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று உள்ளது.
இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன.
இந்த மலைக்கோட்டை புவியியல் சார்பு மட்டுமல்லாமல் தொல்லியல் சார்பாகவும் பெயர் பெற்றுள்ளது.
இந்த திருச்சி மலைக்கோட்டை மலை இமய மலைக்கு முன்னதாகவே உருவானதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இக்கோவிலில் உள்ள குடைவரைக் கோயில் ஆனது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் கலைநயத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மலையேறிய பாதியில் வலதும், இடதும் என இரு புறமாகப் பிரிகின்றன.
ஒருபுறம் தாயுமானவர் சன்னதியின் மறுபுறம் மலையின் உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியாக உள்ளது.
இந்த தாயுமானவர் கோவில் ஆனது மலையின் நடுவில் அமைந்தது போல் இருக்கும்.
கோவிலின் உள்நுழைந்ததும் முதலில் அம்மன் சன்னதியும், அதனைத் தாண்டி மேலே ஏறி சென்றால் தாயுமானவரின் சன்னதியும் தெரியும்.
இந்த மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோவில் ஆகியவை நன்கு தென்படும்.