சேவலை தேசிய பறவையாக வைத்திருக்கும் நாடு.., எது தெரியுமா?
ஒவ்வொரு நாடும் அதற்கென்று ஒரு தேசிய விலங்கு அல்லது தேசியப் பறவையை தேர்ந்தெடுக்கிறது.
அதேபோல், இந்திய நாட்டின் தேசியப் பறவையாக மயிலும், தேசிய விலங்காக புலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சேவலை எந்த நாடு தேசியப் பறவையாக தேர்ந்தெடுத்துள்ளது என்பது பலருக்குக்கும் தெரியாத ஒன்று.
நம் அண்டை நாடான இலங்கைதான் சேவலை தேசியப் பறவையாக தேர்ந்தெடுத்துள்ளது.
சேவலை தேசிய பறவையாக வைத்திருக்கும் நாடு.., எது தெரியுமா? | The National Bird Of Which Country Rooster
அங்கே காட்டுச் சேவல் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இது சிலோன் காட்டுக்கோழி என்று அழைக்கப்பட்டது.
இப்பறவை இலங்கையின் காட்டுப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
காட்டுக்கோழிகள் அனைத்துண்ணிகள் சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் சாப்பிடக்கூடியவை.
ஒரு காட்டுக் கோழியின் நீளம் சுமார் 35 செ.மீ. இருக்கும். மேலும் அதன் எடை 510-645 கிராம் இருக்கும்.
இலங்கையைத் தவிர, ஐரோப்பிய நாடான பிரான்சின் தேசியப் பறவை கூட சேவல்தான்.