பலதும் பத்தும்

பிரித்தானியாவில் Salmon எண்ணிக்கை வரலாறு காணாத சரிவு

பிரித்தானியாவில் அட்லாண்டிக்  சால்மன் மீன்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சால்மன் மீன்கள் 90 சதவிகிதம்

அதன் கடல் மற்றும் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்பு அழுக்கு மற்றும் மாசுபட்டுள்ளதன் காரணமாகவே எண்ணிக்கை சரிவடைந்துள்ளது என பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் முகமை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் salmon எண்ணிக்கை வரலாறு காணாத சரிவு: வெளியான காரணம் | Salmon Population Sinks To New Low

பெரிய, வெள்ளி மீன்கள் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மற்றும் அதில் பாயும் ஆறுகளில் பொதுவாக காணப்படுகின்றன. ஆனால் தற்போது சால்மன் மீன்கள் 90 சதவிகிதம் காணப்படும் பிரித்தானியாவின் நதிகள் மிக மோசமான நிலையில் காணப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, சால்மன் மீன்களின் எண்ணிக்கையானது அதன் நிலையான மக்கள்தொகையை தக்கவைக்க தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது.

இதனால் பிரித்தானியாவின் இயற்கை சூழலை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் முகமை தெரிவித்துள்ளது,

ஒவ்வொரு ஆண்டும் 1.4 மில்லியன்

விவசாய மாசுபாடு, வண்டல் படிவு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இரசாயனக் கழிவுகள், கழிவு நீர் மற்றும் சாலைகள் ஆகியவை சால்மன் வாழ்விடங்களை சீரழிப்பதற்காக குற்றம் சாட்டப்படுகிறது.

பிரித்தானியாவில் salmon எண்ணிக்கை வரலாறு காணாத சரிவு: வெளியான காரணம் | Salmon Population Sinks To New Low

மேலும், விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் நீர், எரிசக்தி மற்றும் கழிவுத் தொழிற்சாலைகள் சால்மன் இனத்தைப் பாதுகாக்க அதிகமாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் 1.4 மில்லியன் சால்மன் மீன்கள் பிரித்தானிய நதிகளுக்குத் திரும்பியது. தற்போது அதில் மூன்றில் ஒரு பங்கிற்குத்தான் காணப்படுகிறது. பிரித்தானியா மட்டுமின்றி, அயர்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் சால்மன் எண்ணிக்கை சரிவடைந்தே காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் பிரித்தானியாவில் அது பெருமளவு அல்லது ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்றே கண்டறியப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.